பாபநாசம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே வழுத்தூரில் வக்ஃப் திருத்த சட்டத்தை திரும்ப பெறக் கோரி வழுத்தூர் ஜமாத்தார்கள் சார்பில் கண்டன பொதுக்கூட்டம் வழுத்தூர் முஹைய்யதீன் ஆண்டவர்கள் திடலில் நடைபெற்றது.
இந்த கண்டன பொதுக்கூட்டத்தில் சட்டப்பிரிவு இளைஞர் காங்கிரஸ் தேசிய ஒருங்கிணைப்பாளர் அலிம் அல்புஹாரி,சென்னை அரபுக் கல்லூரி முதல்வர் சதீதுத்தீன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில செயலாளர் ஷாஜகான் வழுத்தூர் பெரிய பள்ளிவாசல் இமாம் நிஹ்மத்துல்லாஹ் ஆகியோர் கலந்து கொண்டு வக்ஃப் திருத்த சட்டத்தை பற்றி விளக்க உரையாற்றினர் .
இக்கூட்டத்தில் வக்ஃப் திருத்த சட்ட கண்டன பொதுக்கூட்ட ஒருங்கிணைப்பாளர்கள் வழுத்தூர் ஜமாத்தார்கள்,ஏராளமான பெண்கள் உட்பட இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.