மாவட்ட செய்தியாளர் முகம்மது இப்ராகிம்
தென்காசி
தென்காசி மாவட்டம் தென்காசி அடுத்துள்ள கடையநல்லூரை பூர்விகமாகக் கொண்ட இந்திய வம்சாவளியினர் நடந்து முடிந்த சிங்கப்பூர் பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றார் இதனை அடுத்து அவரின் பூர்வீக பூமியான கடையநல்லூரில் பொதுமக்கள் உற்சாக கொண்டாட்டம்.
சிங்கப்பூரில் வசித்து வரும் கடையநல்லூர் வம்சா வளியைச் சார்ந்த டாக்டர் ஹமீத் ரஹ்மத்துல்லா பின் அப்துல் ரசாக் நேற்று நடைபெற்ற சிங்கப்பூரில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் ஜீராங்-வெஸ்ட் தொகுதியிலிருந்து பாராளு மன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார் இவர் ஆளும் கட்சியின் சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்றார் என்பதும் கடையநல்லூர் வம்சாவளியைச் சார்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது .
சிங்கப்பூரின் பாரளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது இதுவே முதன் முறை யாகும் இவர் சிங்கப்பூரில் புகழ்பெற்ற எலும்பு மூட்டு மருத்துவ அறுவை சிகிட்சை நிபுணராவார் .இவரின் தாத்தா காலத்திலேயே சிங்கப்பூருக்கு குடிபெயர்ந்து வாழ்ந்து வருவதாகவும் தன்னுடைய மூதாதையர் குடும்பம் மற்றும் உறவினர்கள் அனைவரும் இன்னமும் கடையநல்லூரில் வசித்து வருவதாகவும் கூறினார்
வெற்றி பெற்ற டாக்டர் ஹமீது ரஹ்மத்துல்லாஹ் அவர்களை கடையநல்லூர் பொதுமக்களும் உறவினர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர் தமிழ்நாட்டைச் சார்ந்த பூர்வ குடிகள் சிங்கப்பூரிலும் வென்று காட்டி இருப்பது உள்ளபடியே வரவேற்கத்தக்கதாகும்.