கோவையில் ரோட்டரி கிளப் வடவள்ளி சார்பாக ராஸ் எனும் கலப்பு இரட்டையர் பேட் மிண்டன் போட்டி
வழக்கறிஞர்கள்,சமூக ஆர்வலர்கள்,பெண் தொழில் முனைவோர்கள் என ரொட்டேரியன்ஸ் பலர் ஆர்வமுடன் பங்கேற்பு
ரோட்டரி கிளப் ஆப் வடவள்ளி சார்பாக மருத்துவ உதவி,அரசு பள்ளிகளுக்கான கட்டிடங்கள் கட்டி கொடுப்பது உள்ளிட்ட பல்வேறு சமூக நலத்திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகின்றன..
இந்த நிலையில் ஏழை எளிய மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்குவதற்கு நிதி திரட்டும் வகையில் ரோட்டரி வடவள்ளி சார்பாக ராஸ் எனும் பேட்மிண்டன் தொடர் போட்டி கோவை வடவள்ளியில் உள்ள ஆர்.வி.பேட்மிண்டன் அகாடமியில் நடைபெற்றது..
முன்னதாக போட்டிகளுக்கான துவக்க விழா ரோட்டரி கிளப் வடவள்ளி தலைவர் இளங்கோ தலைமையில் நடைபெற்றது..
இதில் சிறப்பு விருந்தினராக துணை ஆளுநர் கல்யாண் குமார் கலந்து கொண்டு போட்டிகளை துவக்கி வைத்தார் இந்நிகழ்ச்சியில்,சார்ட்டர் பிரசிடென்ட் மாணிக்கவாசகம்,துணை ஆளுநர் ராஜன் ஆறுமுகம்,செயலாளர் சந்தோஷ் குமார்,ராஸ் போட்டி ஒருங்கிணைப்பாளர் அஜய் ராஜ்,விளையாட்டு துறை தலைவர்கள் ரபியூதீன்,சஞ்சய் மற்றும் ரோட்டரி நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்..
ஒரு நாள் தொடர் போட்டியாக நடைபெற்ற இதில்,சென்னை,புதுவை,திருச்சி,மதுரை ,கோவை,என பல்வேறு பகுதிகளில் இருந்தும் ரோட்டரி கிளப் நிர்வாகிகள்,உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர் கலப்பு இரட்டையர் போட்டிகளாக நடைபெற்ற இதில்,வழக்கறிஞர்கள்,சமூக ஆர்வலர்கள்,தொழிலதிபர்கள் என ஆண்கள்,பெண்கள் போட்டிகளில் பங்கு பெற்றனர்..
இறுதியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பை,மற்றும் சான்றிதழ் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டன இதற்கான விழாவில் ,ரோட்டரி மாவட்டம் 3206 எதிர் கால மாவட்ட ஆளுனர் மாருதி கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பைகள், பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கவுரவித்தார்..
அரசு பள்ளிகளில் பயிலும் ஏழை மாணவ,மாணவிகளின் உயர் கல்விக்கு உதவி தொகை வழங்கும் வகையில்,நிதி திரட்டும் நோக்கத்தில் இந்த ராஸ் பேட்மிண்டன் தொடர் நடத்தப்படுவதாகவும்,வரும் காலங்களில் இது போன்று அனைத்து பகுதிகளிலும் நடத்தப்பட உள்ளதாக போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்…