பியூர் சினிமா மற்றும் கோவை கிளஸ்டர்ஸ் மீடியா இணைந்து கோவையில் திரைத்துறை புத்தக நூலகம் துவக்கம்
விழாவின் ஒரு பகுதியாக சிறந்த குறும்படங்களுக்கான தேர்வு போட்டியில் சிறந்த குறும்படங்களை உருவாக்கிய தொழில் நுட்ப கலைஞர்களுக்கு பரிசுகள் வழங்கி கவுரவிப்பு
கோவை ஹோப்ஸ் பகுதியில் உள்ள கிளஸ்டர்ஸ் இன்ஸ்டியூட் ஆப் மீடியா அண்ட் டெக்னாலஜி கல்லூரியில்,திரைப்பட துறையில் ஆர்வம் உள்ள இளைஞர்களுக்கு துறை சார்ந்த பல்வேறு பயிற்சிகளை வழங்கி வருகின்றனர்..
இந்நிலையில் இளைஞர்களின் திரைத்துறை சார்ந்த கலை ஆர்வத்தை ஊக்குவிக்கும் விதமாக
கிளஸ்டர்ஸ் மற்றும் பியூர் சினிமா நிறுவனம் இணைந்து கோவை குறும்பட திருவிழா போட்டிகள் நடைபெற்றது..
முன்னதாக கிளஸ்டர் வளாகத்தில் பியூர் சினிமா புத்தகம் நூலக துவக்க விழா நடைபெற்றது..
இளைஞர்களின் கலை ஆர்வத்தை ஊக்குவிக்கும் விதமாக நடைபெற்ற குறும்படத் திருவிழாவில் நூற்றுக்கும் மேற்பட்ட குறும்படங்கள் காட்சி படுத்தப்பட்டன..
இதில் சிறந்த குறும்படங்களை, குடும்பஸ்தன் திரைப்பட இயக்குனர் ராஜேஸ்வர் காளி சாமி மற்றும் ஓவியர் ஜீவநாதன் ஆகியோர் நடுவர்களாக கலந்து கொண்டு தேர்வு செய்தனர்..
இந்நிலையில் தேர்வு செய்யப்பட்ட குறும்படங்கள் மற்றும் அதில் பங்காற்றிய நடிகர்,நடிகைகள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா கிளிஸ்டர் வளாகத்தில் நடைபெற்றது..
பியூர் சினிமா நிறுவனத்தின் இயக்குனர் அருண் தலைமையில் நடைபெற்ற விழாவில்,சிறப்பு விருந்தினராக தேசிய விருது பெற்ற திரைப்பட ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் கலந்து கொண்டு சிறந்த குறும்படங்களை இயக்கிய இயக்குனர் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்களுக்கு பரிசுகள் வழங்கி கவுரவித்தார்..
முன்னதாக விழாவில் பேசிய பியூர் சினிமா அருண்,குறும்படங்கள் உருவாக்குவதில் தற்போது இளைஞர்கள் அதிக ஆர்வம் காட்டி வருவதாக தெரிவித்த அவர்,இந்திய அரசு சிறந்த குறும்படங்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஊக்க தொகைகள் குறித்து சரிவர விழிப்புணர்வு இல்லை என கூறினார்..
தொடர்ந்து பேசிய ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் சினிமாவின் முக்கியத்துவத்தை பற்றி கூறிய அவர்,அதே நேரத்தில் குறும்படங்கள் சர்வதேச அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருவதாக குறிப்பிட்டார்..
சினிமா துறையில் வாய்ப்புகளை சரிவர பயன்படுத்தினால் சாதித்து வெற்றி பெற முடியும் என கூறினார்..
திரைத்துறையில் தொழில் நுட்ப வளர்ச்சி ஆரோக்கியமாகவே பார்ப்பதாக கூறிய அவர்,தென்னிந்திய தொழில் நுட்ப கலைஞர்கள் இந்திய அளவில் கால் பதித்து வருவது மகிழ்ச்சியே என தெரிவித்தார்..
விழாவில் கிளஸ்டர்ஸ் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மீடியா அண்ட் டெக்னாலஜியின் நிர்வாக இயக்குனர் அரவிந்தன் சௌந்தரராஜன் கல்லூரியின் முதல்வர் அலெக்ஸ் ராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்…