காஷ்மீர் தீவிரவாத தாக்குதலை கண்டித்து திருவாரூரில் பாரதிய ஜனதா கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்…
காஷ்மீர் பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் அப்பாவி இந்தியர்கள் 28 பேர் கொல்லப்பட்டதை கண்டித்து திருவாரூர் புதிய இரயில் நிலையம் எதிரில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது,
திருவாரூர் மாவட்டத் தலைவர் வி.கே.செல்வம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்பாட்டத்தில் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் தங்க. வரதராஜன் மாநில விவசாய அணி செயலாளர் கோவி.சந்துரு, மாவட்ட துணைத் தலைவர்கள் மணிமேகலை, சங்கர், சதாசதீஷ், மாவட்ட செயலாளர் ரவி, நகர செயலாளர் கணேசன், மாவட்ட பொருளாளர் அட்சயா முருகேசன் முன்னாள் மாவட்ட பொதுச் செயலாளர் செந்தில் அரசன் உள்ளிட்ட பாஜக மாவட்ட ஒன்றிய நகர பொறுப்பாளர்கள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்
கண்டன ஆர்ப்பாட்டத்தில் தீவிரவாதத்தை தடுக்க வேண்டும், இந்திய ராணுவத்திற்கு துணை நிற்போம், ரபேல் விமானங்கள் பறக்கட்டும், இந்திய மக்களை பாதுகாப்போம், வெளியேற்று வெளியேற்று பாகிஸ்தானிய தீவிரவாதிகளை தமிழகத்தில் இருந்து வெளியேற்றுஎன்ற கண்டன கோஷங்களை எழுப்பி முந்நூறுக்கும் மேற்பட்ட பாஜகவினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.