தேவகோட்டை பள்ளியில் ஒளி ஏற்றுதல் விழா-பிரியா விடை பெற்ற பள்ளி மாணவர்கள்

தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலை பள்ளியில் எட்டாம் வகுப்பு மாணவர்களின் பிரியா விடை பெறும் விழா பெற்றோர் ஆசிரியர் முன்னிலையில் ஒளி ஏற்றும் விழாவாக நடை பெற்றது.

விழாவின் தொடக்கமாக எட்டாம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தங்கள் பெற்றோர் ஆசிரியர் முன்னிலையில் வரிசைப்படி நின்றனர்.அவர்கள் முன்பாக ஏழாம் வகுப்பு மாணவர்கள் உட்கார்ந்து இருந்தனர்.ஆசிரியை முத்துலெட்சுமி அனைவரையும் வரவேற்றார்.மாணவிகளின் திருக்குறள் நடனம் நடைபெற்றது. மாணவ, மாணவியர் கல்வியை எண்ணிக்கொண்டு பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தீப ஒளியை ஏற்ற அதனை தொடர்ச்சியாக எட்டாம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் கையில் மெழுகுவர்த்தி தீபம் ஏற்றினர்.எட்டாம் வகுப்பு மாணவி முகல்யா உறுதி மொழி வாசிக்க எட்டாம் வகுப்பு அணைத்து மாணவர்களும் உறுதிமொழி எடுத்து கொண்டனர்.அதன் பிறகு தீப ஒளியை ஏழாம் வகுப்பு மாணவர்களுக்கு வாழ்த்தி கொடுக்க அவர்கள் தீபத்தை வாங்கி கொண்டனர்.அடுத்த வகுப்பு மாணவர்கள் சார்பில் மாணவி சாதனஸ்ரீ ஏற்புரை வழங்கினார்.நிறைவாக ஆசிரியர் ஸ்ரீதர் நன்றி கூறினார்.விழாவில் மாணவ,மாணவியர் முதல் வகுப்பு முதல் இப்பள்ளியில் படித்த நினைவுகளை பகிர்ந்துகொண்டனர்.விழாவில் ஏராளமான பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.