தஞ்சாவூர்
தஞ்சாவூர் மேம்பாலம் அருகே ரெட் கிராஸ் கூட்ட அரங்கில் தமிழ் தேசிய முன்னேற்றக் கழகம் தஞ்சை மத்திய மாவட்டம் சார்பில் டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாள் விழா, கழகப் பொதுச்செயலாளர் த.சு.கார்த்திகேயன் பிறந்தநாள் விழா, விருது வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழா மாநில பொருளாளர் செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது.

தஞ்சை மத்திய மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜேஷ் வரவேற்றார். தஞ்சை மத்திய மாவட்ட பொருளாளர் சிவதமிழன் மாவட்ட தொழிற்சங்க அணி கிருஷ்ணமூர்த்தி மாவட்ட மகளிர் அணி செயலாளர் மணி.முருக வேணி, மாவட்ட வழக்கறிஞர் அணி துரை.ராஜகுரு, மாவட்ட துணைச் செயலாளர் தவமூர்த்தி, மாவட்ட இளைஞரணி செயலாளர் அர்ஜுன், மாவட்ட துணை செயலாளர் துரை.மச்சேந்திரன், மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் சண்.முருகேசன், துணை பொருளாளர் மணிகண்டன், துணைச் செயலாளர் அருணா சதீஷ், மாவட்ட துணை பொருளாளர் ராஜ்குமார், ஒரத்தநாடு ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் ரவிச்சந்திரன், துணை செயலாளர்கள் மணிகண்டன், பாரதி ஆகியோர் முன்னிலை வைத்தனர்.

விழாவில் அம்பேத்கர் மக்கள் மறுமலர்ச்சி எக்க நிறுவனத் தலைவர் பிலார் மதியழகனுக்கு அம்பேத்கர் விருதும், தமிழ் தேசிய முன்னேற்றக் கழக துணைப் பொதுச் செயலாளர் சி.குணசேகருக்கு பெரியார் விருதும், திருப்பனந்தாள் விவசாய அணி செயலாளர் சக்திவேலுக்கு மேதகு.பிரபாகரன் விருதும் வழங்கப்பட்டது.

தமிழ்த் தேசிய முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் வழக்கறிஞர் த.சு. கார்த்திகேயன் ஏற்புரையாற்றினார். விழாவில் மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் குணசேகரன், மாநில தலைமை செயற்குழு தமிழ்த்தோழன், மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் சந்திரசேகரன், புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் ரஜினி, தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் ஆறுமுக.ராஜா, தஞ்சை தெற்கு மாநகர செயலாளர் செல்வ.கார்த்திக் மற்றும் பலர் வாழ்த்தி பேசினர். முடிவில் மைய செயற்குழு புகழேந்தி நன்றி கூறினார்.

முன்னதாக தஞ்சை பழைய பேருந்து அருகில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து பொதுச்செயலாளர் வழக்கறிஞர் த.சு.கார்த்திகேயன் மேள தாளங்கள் முழங்க கூட்ட அரங்கிற்கு ஊர்வலமாக அழைத்துவரப்பட்டார். விழாவை ஒட்டி தஞ்சை மறுத்துக் கல்லூரி மருத்துவமனையில் மதியம் 2000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 500 பேருக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

Share this to your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *