தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.
ஜோ.லியோ யாக்கோப் ராஜ்.
தஞ்சாவூர்,
தஞ்சை நீலகிரி ஊராட்சி இராஜாஜி நகரில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கு.பரசுராமன் நினைவு பெரியார் படிப்பகம் மற்றும் ஆசிரியர் கி.வீரமணி நூலகம் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா மாலை நடைபெற்றது.
விழாவிற்கு வாழ்வியல் சிந்தனைகள் வாசகர் வட்டம் புரவலர் மாதவராஜ் தலைமை வகித்தார். வாசகர் வட்ட தலைவர் முருகேசன் வரவேற்றார்.
அமிர்தா புத்தக நிலையம் திராவிடச் செல்வன், ஆடிட்டர் சரவணன், இயக்குனர் பொற்கோவன், செயலாளர் செந்தூரப் பாண்டியன், பொருளாளர் குட்டிமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் வழக்கறிஞர் எஸ்.எஸ்.இராஜ்குமார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் படத்தை திறந்து வைத்தார். சட்டமேதை டாக்டர் அம்பேத்கர் படத்தை திராவிடர் கழக தலைமை கழக பேச்சாளர் பெரியார் செல்வன் திறந்து வைத்தார். தொழிலதிபர் இராம.பாஸ்கரன் விழா தொடக்க உரையாற்றினார்.
விழாவில் தமிழ் இணையக் கல்விக்கழக நெறியுரைஞர் செந்திலைந.கௌதமன் சிறப்புரையாற்றினார். விழா நிகழ்ச்சிகளை திராவிடர் கழக ஒருங்கிணைப்பாளர் ஒரத்தநாடு குணசேகரன் தொகுத்து வழங்கினார்.
விழாவில் திராவிடர் கழக மகளிர் அணி மாவட்ட தலைவர் கலைச்செல்வி, தஞ்சாவூர் தெற்கு ஒன்றிய தி.க. செயலாளர் நெல்லுப்பட்டு இராமலிங்கம், தெற்கு ஒன்றிய தலைவர் இராமகிருட்டிணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் படிப்பக நிர்வாகி மாரிமுத்து நன்றி கூறினார்.