சின்னமனூர் நகர பாரதிய ஜனதா கட்சி சார்பாக ஜம்மு காஷ்மீர் தீவிரவாத தாக்குதல்களுக்கு கண்டனம் தேனி மாவட்டம் சின்னமனூர் நகரில் உள்ள பிரதான பகுதியான மார்க்கையன்கோட்டை ரவுண்டானா அருகே பாஜக மாவட்ட தலைவர் நகரத் தலைவர் சிங்கம் தலைமையிலும் முன்னாள் நகரத் தலைவர் குருசாமி இ லோகேந்திரராஜன் முன்னிலையிலும் ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினார்கள்

இதில் பைசரன் புல்வெளியில் குடும்பத்துடன் விடுமுறையை கழிக்க வந்த அப்பாவி பயணியர் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர் இந்த தாக்குதலில் முஸ்லிம் அல்லாதோ ரை குறிவைத்து குறிப்பாக இந்துக்களா என்பதை கேட்டு பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தி விலைமதிப்பற்ற மனித உயிரை பறித்த பயங்கரவாதிகளை கண்டித்து தீபம் ஏற்றி தீவிரவாதத்துக்கு எதிராக இறந்தோரின் ஆன்மா சாந்தி அடைய மௌன அஞ்சலி செலுத்தினார்கள் இந்த நிகழ்ச்சியில் உள்பட பாஜக சின்னமனூர் நகர பாஜக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார்கள்.

Share this to your Friends