தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
தாராபுரம் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவிலில் வெள்ளி ஊஞ்சல் உற்சவம்..
தாராபுரம்,
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகரில் பிரசித்தி பெற்ற அருள்மிகு மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான அம்மன் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் நிகழ்ச்சி நேற்று இரவு நடைபெற்றது. அப்போது கோவில் கருவறையில் உள்ள மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது.
அதைத் தொடர்ந்து அம்மன் வெள்ளி ஊஞ்சலில் வைக்கப்பட்டு ஆராதனை நடைபெற்றது.அப்போது பக்தர்கள் அம்மன் புகழ் பாடி வழிபாடு செய்தனர்.முடிவில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
அதில் நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் அன்னதானம் வாங்கி சென்றனர். இதில் தாராபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.