காங்கேயம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
காங்கயத்தில் பிஏபி நீர் திருட்டை தடுக்க கோரி பிஏபி விவசாயிகள் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு உள்ளிருப்பு போராட்டம்
திருப்பூர் மாவட்டம், காங்கயம் பிஏபி காங்கயம் வெள்ளகோவில் கிளை கால்வாய் காங்கயத்தில் இருந்து வெள்ளகோவில் கடைமடை வரை 48 ஆயிரம் ஏக்கராக விவசாயம் நிலம் அமைந்துள்ளது.
கடைமடைக்கு வரை உரிய நீர் திறக்கப்பட வேண்டும் என நீதிமன்ற உத்தரவை மீறியும் தண்ணீர் திருட்டு நடைபெறுகிறது. எனவே தண்ணீர் திருட்டை தடுக்க கோரியும், உரிய நீர் வழங்க வேண்டும் எனவும் விவசாயிகள் நேற்று காங்கயம் பொதுப்பணித்துறை அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள பிஏபி நீர் மேலாண்மை அதிகாரிகளை எதிர்த்து உள்ளிருப்பு போரட்டத்தை அறிவித்தனர். பின்னர் திடீரென காங்கயம் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு உள்ளிருப்பு போரட்டத்தை நேற்று காலை 11.30 மணி அளவில் துவங்கினர். இதனை அடுத்து வட்டாட்சியர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பு நிலவியது.
கடந்த பல வருடங்களாக பிஏபி விவசாயிகளின் நிலங்களுக்கு பாய வேண்டிய பிஏபி பாசன நீர் முறையாக கிடைப்பதில்லை எனவும், தண்ணீர் திருட்டை தடுக்க வேண்டும் எனவும் பலமுறை போராட்டங்களை நடத்தி, நீதிமன்றம் உரிய நீர் வழங்க வேண்டும் என சம்பந்தப்பட்ட துறைக்கு உத்தரவிட்ட பிறகும், தொடர்ந்து தண்ணீர் திருட்டு நடைபெற்று வருகிறது.
இதற்கு காரணம் அரசு அதிகாரிகள் எனவும், கடைமடைக்கு வர வேண்டிய நீர் திறக்க வேண்டும் எனவும், தண்ணீர் திருட்டை தடுக்க வேண்டும் எனவும் காங்கயம் வட்டாட்சியர் அலுவலகத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட பிஏபி விவசாயிகள் அனைத்து நீதிமன்ற ஆவணங்களுடனும் உள்ளிருப்பு போராட்டத்தை நடத்தினர். இந்த நிலையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலிசார் குவிக்கப்பட்டனர். இதனால் காங்கயம் தாசில்தார் அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.