தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல் :9715328420
தாராபுரம்:இந்து முன்னணி சார்பாக ஜம்மு காஷ்மீர் பஹல்காமில் சுற்றுலா பயணிகள் மீதான பயங்கரவாத தாக்குதலில் பலியான 28 பேர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலா பயணிகள் மீதான பயங்கரவாத தாக்குதலில் 28 பேர் பலியானார்கள் அவர்களுக்கு இந்து முன்னணியினர் சார்பில் தாராபுரம் பழைய நகராட்சி அலுவலகம் முன்பு வைக்கப்பட்டிருந்த அவர்களது திருவுருவப்படத்திற்கு மலர் தூவி, தீபமேற்றி கருப்பு பேட்ச் அணிந்து இந்து முன்னணியினர் அஞ்சலி செலுத்தினர்.
இதில் தாராபுரம் பகுதியைச் சேர்ந்த இந்துக்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து இந்து முன்னணி பாலு பேசுவையில்
பைசரன் பள்ளத்தாக்கு பகுதிக்கு வாகனங்களில் செல்ல முடியாது. கால்நடையாக அல்லது குதிரைகள் மூலமாக மட்டுமே செல்ல முடியும்.இங்கு சென்ற சுற்றுலாப் பயணிகள் சிலரை ராணுவ உடையில் வந்த தீவிரவாதிகள் செவ்வாய்க்கிழமை மதியம் 3 மணியளவில் சுற்றி வளைத்தனர். அவர்களிடம் பெயர் மற்றும் மதத்தை தீவிரவாதிகள் கேட்டு துப்பாக்கி சூடு நடத்தினர். துப்பாக்கி சூடு சத்தம் கேட்டதும், சுற்றுலாப் பயணிகள் இங்கும், அங்கும் ஓடினர். திறந்தவெளி என்பதால், சுற்றுலாப் பயணிகளால் துப்பாக்கி சூடு தாக்குதலில் இருந்து தப்பிக்க முடியவில்லை
இத்தாக்குதலில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உட்பட 28 பேர் உயிரிழந்தனர், பலர் காயம் அடைந்தனர். இது தீவிரவாதிகள் திட்டமிட்டு நடத்திய தாக்குதல் போல் தெரிகிறது. தீவிரவாதத்தால் உயிரிழந்த 28 உயிர்களுக்கு இந்து முன்னணி சார்பில் அஞ்சலி செலுத்திய உள்ளோம் என இவ்வாறு தெரிவித்தனர்.