பெரம்பலூர்கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் தெற்குஒன்றியம்,கீழப்பெரம்பலூர் கிராமத்தில் கழகத்தின் இரு வண்ணக் கொடியினை இரு இடங்களில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன்,
போக்குவரத்து துறை அமைச்சர் .சா.சி.சிவசங்கர் ஆகியோர் ஏற்றி வைத்தார்.
இந்த நிகழ்வில் மாவட்ட கழக பொறுப்பாளர் ஜெகதீசன், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன்,வேப்பூர் வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் மதியழகன்,வேப்பூர் தெற்கு ஒன்றிய செயலாளர். மருவத்தூர். ராஜேந்திரன், மற்றும் மாவட்ட, ஒன்றிய, கிளை, கழக நிர்வாகிகள் ஏராளமானேர் கலந்து கொண்டனர்.