பாபநாசம் அருகே அய்யம்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒலிம்பிக் ஜோதி ஏற்றி கோலாகலமாக கொண்டாடிய நூற்றாண்டு விழா…
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அண்ணாதுரை பங்கேற்பு……
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே அய்யம்பேட்டையில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் நூற்றாண்டு திருவிழா கோலாகலமாக பள்ளி தலைமை ஆசிரியர் சரவணன் நடைபெற்றது .
இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அண்ணாதுரை, மாவட்ட கல்வி அலுவலர் சுந்தர், உதவி தலைமை ஆசிரியர் சின்ன ராசா, பேரூராட்சி மன்ற தலைவர் புனிதபதி குமார் ஆகியோர் கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் ,சான்றிதழ் வழங்கி சிறப்புரை ஆற்றினர்.
இதில் மாணவ மாணவிகளின் கரகாட்டம், தப்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் செய்து காண்போரை மெய்சிலிர்க்க வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் கோவி.அய்யாராசு, தமிழ்ச்செல்வன், மகேந்திரன், மாதவன், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள், ஆசிரியர்கள் ,மாணவர்கள், பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர்.