தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு உலக புத்தக தினத்தினை முன்னிட்டு தேவகோட்டை சார் ஆட்சியரின் நேர்முக உதவியாளர் புத்தகங்களை வழங்கி ஆச்சரியத்தில் அசத்தினார்.

தேவகோட்டை சார் ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சாந்தி பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் வசம் பள்ளி மாணவர்களுக்கு புத்தகங்களை பரிசாக வழங்கி பேசுகையில், ” புத்தகம் வாசிப்பது நல்ல பழக்கம் ஆகும். மனிதனை மனிதனாக மாற்றுவது புத்தகம் மட்டுமே. மனிதன் புத்தகம் படித்தால் மட்டுமே சிறந்த மனிதனாக வளர முடியும். மாணவர்களுக்கு படிப்பு மட்டும் போதாது. வெளி உலக அனுபவமும் கண்டிப்பாக தெரிய வேண்டும்.

அதற்கு இந்தப் பள்ளியில் ஏராளமான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதை பாராட்டுகின்றேன்.வாழ்த்துகள். என்றார். சிறப்பாக புத்தகம் வாசித்து கருத்துக்களை கூறிய அனைத்து மாணவர்களுக்கும் புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டது.நிகழ்வில் சார் ஆட்சியரின் அலுவலக தட்டச்சர் அன்பரசன் உட்பட ஏராளமான பெற்றோர்கள் பங்கேற்றனர். நிறைவாக ஆசிரியை முத்துமீனாள் நன்றி கூறினார்.

Share this to your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *