கோவையின் குல தெய்வம் என போற்றப்படும் தண்டு மாரியம்மன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் வைபோக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

கோவையின் குல தெய்வமாக உள்ள தண்டு மாரியம்மன் கோவிலின் சித்திரை திருவிழா கடந்த 14ஆம் தேதி முகூர்த்த கால் நடுதலுடன் தொடங்கியது.இதனைத் தொடர்ந்து கொடியேற்றம், அக்னி சாட்டு, திருவிளக்கு வழிபாடு, வெள்ளி வாகனம், சிம்ம வாகனம், குதிரை வாகனம் என அம்மன் என ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனத்தில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

இந்நிலையில் இன்று தண்டு மாரி அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவ விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.இதனை அடுத்து மலர் பல்லக்கில் அம்மன் திருவீதி உலா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.

இதனை தொடர்ந்து நாளை சக்தி கரகம் ,அக்னி சட்டி பால்குடம் புறப்பாடு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. வரும் 27ஆம் தேதி சங்காபிஷேகம் வசந்த உற்சவம் நிகழ்ச்சியுடன் சித்திரை திருவிழா முடிவடைகிறது..