தேனி மாவட்ட அளவிலான தென்னை சாகுபடி கருத்தரங்கம் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் நடந்தது தேனி மாவட்டம் தேனி அல்லிநகரம் நகராட்சிக்கு உட்பட்ட மாடர்ன் மஹாலில் தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறையின் சார்பில் மாவட்ட அளவிலான தென்னை சாகுபடி கருத்தரங்கம் மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்ஜீத் சிங் தலைமையில் நடைபெற்றது . தென்னை சாகுபடி கருத்தரங்கில் சாகுபடி குறித்த கையேட்டினை மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்ஜீத் சிங் வெளியிட அதனை வேளாண் அதிகாரிகள் விவசாயிகள் பெற்றுக் கொண்டனர்
மாவட்டத்தில் தென்னை சாகுபடியில் விவசாயிகள் எவ்வாறு வளர்ச்சி அடைய வேண்டும் என்பது குறித்து விவசாயிகளுக்கு விளக்கி பேசினார் இந்த கருத்தரங்கில் இணை இயக்குனர் வேளாண்மை சாந்தாமணி துணை இயக்குனர்கள் நிர்மலா தோட்டக்கலை சுரேஷ் வேளாண் வணிகம் செயற்பொறியாளர் கருப்பசாமி தென்னை ஆராய்ச்சியாளர்கள் விஞ்ஞானிகள் வேளாண் அலுவலர்கள் மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து தென்னை சாகுபடி விவசாயிகள் வேளாண் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்