குப்பைகளை தரம் பிரித்து வழங்க நகர சபை கூட்டத்தில் பொதுமக்களிடம் கோரிக்கை வைத்த கவுன்சிலர்

திருவொற்றியூர் மண்டலத்திற்குட்பட்ட 12 ஆவது வார்டிற்குட்பட்ட திலகர் நகர் பகுதியில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்க பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் உத்தரவின்படி பொதுமக்களின் கோரிக்கைகளை அறிந்து கொள்ளவும், அவர்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றவும், பகுதி சபை கூட்டம் நடைபெற்றது

சென்னை மாநகராட்சி திருவொற்றியூர் மண்டலத்திற்குட்பட்ட 12 ஆவது வார்டிற்குட்பட்ட திலகர் நகர் பகுதியை சேர்ந்த மக்கள் பங்கேற்ற நகர சபை கூட்த்தில்

12 ஆவது வார்டு கவுன்சிலர் கவி.கணேசன் தலைமையில் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்:
க.வீ.சதீஷ்குமார் DME.,EXMC ஏற்பாட்டில் 9 ஆவது நகர சபை கூட்டமாக நடைபெற்ற கூட்டத்தில் சென்னை மாநகராட்சி, குடிநீர் துறை, மின்சார துறை, சுகாதார துறை, திடக்கழிவு மேலாண்மை துறை அதிகாரிகள் மற்றும் சென்னை பெருநகர மாநகராட்சி உதவி பொறியாளர் .S.கமலக்கண்ணன் சென்னை பெருநகர மாநகராட்சி வரி வசூலிப்பாளர் .S.சுந்தரமூர்த்தி
சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீர் உதவி பொறியாளர் .S.நந்தகுமார்

பெருநகர சென்னை மாநகராட்சி.உரிமம் ஆய்வாளர் 8.பிரபாகரன்
திடக்கழிவு மேலாண்மை மேற்பார்வையாளர். R.பாஸ்கர் உள்ளிட்ட அதிகாரிகள் திலகர் நகர் 1 ஆவது தெரு முதல் 5 ஆவது தெருக்களில் வசித்து வரும் பொதுமக்கள் நகர சபை கூட்டத்தில் கலந்து கொண்டு பொதுமக்கள் தங்களது குறைகளை தெரிவித்தனர்.

திலகர் நகர் பகுதியில் தொடர்ந்து மின்வெட்டு 5 நாட்களுக்கு ஒரு முறை ஏற்படுவதாகவும், கணபதி நகர் அவென்யு பகுதியில் கழிவு நீர் அடைப்பு, தொடர் மின்வெட்டு, குப்பைகள் முறையாக அள்ளப்படவில்லை எனவும், திலகர் நகர் கங்கையம்மன் கோவில் தெரு சந்திப்பில் வேகத்தடை அமைக்க வேண்டும் எனவும், திலகர் நகர் பகுதியில் பெரும்பாலன வீடுகளுக்கு பட்டா இல்லாததால் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூட்டத்தில் பங்கேற்ற பொதுமக்கள் தங்களுடைய குறைகளை கோரிக்கையாக வைத்தனர்.

கூட்டத்தில் பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கொள்ள உள்ள நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைத்தனர்.

இந்த நிலையில் கூட்டத்தில் பேசிய கவுன்சிலர் கவி.கணேசன், இதுவரை 12 ஆவது வார்டில் 8 நகர சபை கூட்டம் நடத்தப்பட்டு விட்டது. 9 ஆவது கூட்டமாக திலகர் நகர் பகுதியில் இந்த கூட்டம் நடைபெறுகிறது.

குப்பைகளை முறையாக அள்ளுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அதேபோல் இந்த நகர சபை உறுப்பினராகிய நீங்கள் தங்கள் வீடுகளில் குப்பைகளை முறையாக தரம் பிரித்து வழங்க வேண்டி கொள்கிறோம்.

பாட்டில் ஓடுகள், இன்சுலின் ஊசி போன்ற பொருட்கள் குப்பைகளுடன் இருப்பதால் இதனை தரம் பிரிக்கும் ஊழியர்களுக்கு கைகளிலும், நக கண்களிலும் ஊசியோ, கண்ணாடி பாட்டிலோ குத்தி காயம் ஏற்பட்டுள்ளதை நான் என கூட பார்த்துள்ளேன். அதன் விளைவாக அவர்களுக்கு நோய் பாதிப்பு ஏற்படும் ஆபத்து உள்ளது.

உங்களின் கோரிக்கைகளை ஏற்று பணியாற்ற இங்கு தாங்கள் அனைவரும் உள்ளோம். அதேபோல இங்குள்ள அதிகாரிகள் முதல் களபணியாளர் வரை உள்ள ஊழியர்களும் மனிதர்கள் என்பதை மனதில் கொண்டு குப்பைகளை வீடுகளிலேயே தரம் பிரித்து வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

கூட்டத்திற்கு முன்பாக மாலை அனைத்து தெருக்களிலும் நகர சபை கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என தண்டோரா போட்டு பொதுமக்களுக்கு அறிவிப்பு செய்யப்பட்டது. மேலும் கூட்டம் முடிந்த நிலையில் கூட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு அறுசுவை உணவு வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் K.சுரேஷ்(எ) சூரி 5-ம் எண் வார்டு குழு உறுப்பினர் M.ரமேஷ்ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

Share this to your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *