செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் ஒன்றியம் வெள்ளபுத்தூர் ஊராட்சியில் கூடுதல் ஆட்சியர் மற்றும் திட்ட இயக்குனர் வி.எஸ்.நாராயண சர்மா வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்
குறிப்பாக வெள்ளபுத்தூர் ஊராட்சியில் செயல்பட்டு வரும் வட்டார நாற்றங்கள் பண்ணை மற்றும் திடக்கழிவு மேலாண்மை குறித்தும் கேட்டறிந்தார் பின்பு சி ஆர் ஐ முறையில் மரக்கன்று நடப்பட்டது. உடன் உதவி செயற்பொறியாளர் தனசேகர், வட்டார வளர்ச்சி அலுவலர் சிவகலை, பொறியாளர் ராமசாமி,வட்டார மேற்பார்வையாளர் லட்சுமணன், ஒருங்கிணைப்பாளர் ரகுநாதன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் விஜயகுமார் ஊராட்சி செயலர் ராஜசேகர் ஊராட்சி ஊக்குநர் மற்றும் திட, திரவ கழிவு மேலாண்மை திட்டம் ஊராட்சி பயிற்சியாளர் பாக்கியலட்சுமி, மண்புழு உர பயிற்றுனர் மற்றும் வட்டார வள பயிற்றுநர் பிரபாவதி, பணிதல பொறுப்பாளர் சங்கீதா மற்றும் விஜயலட்சுமி உடன் இருந்தனர்.