தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.
ஜோ.லியோ யாக்கோப் ராஜ்.
தஞ்சாவூர், ஏப்- 28. தஞ்சாவூர் மானம்புச்சாவடி சவுராஷ்டிரா ஆரம்பப் பள்ளியின் முன்னாள் மாணவ, மாணவிகள் இனைந்து ஆசிரியருக்கு பாராட்டு விழாவும், அந்த பள்ளிக்கு ஸ்மார்ட் டிவி ஒன்றும் பரிசு வழங்கினார்கள்.
மானம்புச்சாவடி சவுராஷ்டிரா ஆரம்பப் பள்ளியின் 1965 ஆம் ஆண்டு முதல் 1980 ஆண்டு வரையில் ஆரம்பக்கல்வி படித்த 149-முன்னாள் மாணவ, மாணவிகள் அவர்களின் பள்ளி ஆசிரியர் 82-வயதான உயர்.திரு ஹரி சார் அவர்களுக்கு ஆரம்பக் கல்வி ஞானகுரு பட்டமும், ருபாய்-2 லட்சம் குருதட்சணையும் கொடுத்தது. அந்த பள்ளிக்கு ஸ்மார்ட் டிவி ஒன்றும் பள்ளி மாணவர்களுக்கு எவர்சில்வர் லஞ்ச்பாக்ஸ் 40-ம் கொடுக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சி டாக்டர் ஸ்ரீதர் தலைமையில், பேராசிரியர் யூ.ராஜன் வரவேற்புரையாற்றினார், ஏ.எம்.கிருஷ்ணமூர்த்தி, ஏ.எஸ்.ராமச்சந்திரன், எம்.ஆர்.சுப்புராமன், ஆர்.கோவிந்தராமன், எம்.எஸ்.ராமலிங்கம், கே.பிரேம், யூ.என்.கேசவன் வாழ்த்துரை வழங்கினார்,
பி.எல்.கேசவன் நன்றி உரை கூறினார்கள்.
இந்நிகழ்வில் ஏற்பாடுகளை ஜே.கே.சௌந்தரராஜன், எஸ்.கே.ரவி, பி.ஆர்.பரந்தாமன், டி.ஆர்.அசோகன், ஜி.எஸ்.ராஜசேகர், ஏ.ஆர்.ராமதாஸ், ஏ.ரகுராமன், பி.கே .ரவி, டாக்டர் பி.ஆர்.வசந்தி, என்.ஜே.சித்ரா, ஜி.எஸ்.கௌரி, கே.பி.குமுதவல்லி, பி.ஆர்.மாலா ஆகியோர்கள் சிறப்பான முறையில் செய்திருந்தார்கள் முன்னாள் மாணவ மாணவிகள் ஊர் பெரியோர்கள் நண்பர்கள் ஹரி சார் உறவினர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
பல ஆண்டுகள் கழித்து ஒன்றாக இணைந்து சந்தித்ததில் நாங்கள் அனைவரும் மகிழ்ச்சி வெள்ளத்தில் இருக்கிறோம் என்று பிரிந்து செல்ல மனம் இல்லாமல் இரவு 10 மணி வரை நிகழ்வு நடந்த இடத்திலேயே அனைவரும் பேசிக்கொண்டே இருந்தார்கள்.
இனி வருங்காலங்களில் சௌராஷ்ட்ரா ஆரம்பப் பள்ளியில் படிக்கும் ஏழை எளிய மாணவர்களுக்கு தொடர்ந்து உதவிடவும் அவர்களது கல்விக்காக சேவை செய்யவும் முடிவு செய்தார்கள்.