மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் ஆறாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த இளைஞர் போக்சோ சட்டத்தின் கீழ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார். சீர்காழி பகுதியைச் சேர்ந்த இளைஞர் பாலாஜி (24). இவர் ஆறாம் வகுப்பு படிக்கும் 11 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் சீர்காழி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் செல்வி மற்றும் போலீஸார் இளைஞர் பாலாஜி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து இளைஞரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Share this to your Friends