மதுரை உயர் நதிமன்ற உத்தரவுப்படி-தென்காசி காசி விஸ்வநாதர் கோவிலில் சென்னை ஐஐடி குழு நேரில் ஆய்வு.

தென்காசி காசி விஸ்வநாதர் கோவில் திருப்பணி மற்றும் புனரமைப்பு வேலைகளில் முறைகேடு நடந்திருப்பதாக கூறி நம்பிராஜன் மற்றும் சிவபாலன் உள்ளிட்டோர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர். இதன் காரணமாக ஏப்ரல் 07 ம் தேதி நடைபெற இருந்த கும்பாபிஷேகத்திற்கு மதுரை உயர்நீதிமன்றம் கிளை இடைக்கால தடை விதித்தது.

அதனைத் தொடர்ந்து கோவிலில் யாக சாலை பூஜைகள் தொடங்கப்பட்டு தொடர்ந்து வேலைகள் நடைபெற்று வரும் நிலையில் கும்பாபிஷேகத்தை நிறுத்த வேண்டாம். எனவும், இடைக்கால தடையை நீக்க கோரியும் கோவில் நிர்வாகம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து நிர்ணயிக்கப்பட்ட ஏப்ரல் 7-ம் தேதி கும்பாபிஷேகம் நடத்துவதற்கு தடையை நீக்கிய உயர்நீதிமன்றம் கும்பாபிஷேகம் முடிந்த பின்னர் உயர்நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட வழக்கறிஞர் கமிஷன் மற்றும் சென்னை ஐஐடி குழுவினர் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டது.

இதனை முன்னிட்டு நேற்று உயர்நீதிமன்றம் மதுரை கிளை சார்பில் அமைக்கப்பட்ட வழக்கறிஞர் கமிஷன் சார்பாக மூத்த வழக்கறிஞர் ஆனந்தவல்லி மற்றும் சென்னை ஐஐடி சார்பில் அனு சந்தானம், அருண் மேனன் ஆகியோர் தலைமையிலான குழுவினர் தென்காசி காசி விஸ்வநாதர் கோவில் வளாகத்தில் கோவில் கட்டுமானங்கள் மற்றும் மதில் சுவர்களை ஆய்வு செய்தனர். மேலும் கோவிலில் செய்யப்பட்ட திருப்பணி வேலைகள் குறித்தும் கேட்டறிந்தனர்.

அப்போது அவர்கள் அதிகாரிகளிடம் பல்வேறு கேள்விகளை முன் வைத்தனர் குறிப்பாக கோவில் வளாகத்தில் இருந்து சுமார் 500 டிராக்டர் அளவில் மண் அள்ளப்பட்டது ஏன் எனவும் இதற்கான ஆவணங்கள் முறையாக கையாளப்பட்டுள்ளதா எனவும் கேள்வி எழுப்பினர். அதற்கு மண் அள்ளப்பட்டது

உண்மைதான் ஆனால் அதற்கு உரிய ஆவணங்கள் இதற்கு முன்னர் இருந்த கோவில் செயல் அலுவலர் முருகன் தயார் செய்யவில்லை என தெரிவித்தனர். ஆய்வு குழுவினர் தொடர்ந்து சுமார் 5 மணி நேரம் கோவில் வளாகத்தில் கட்டுமானங்களை பார்வையிட்டு ஆய்வு செய்ததுடன் அதற்கான ஆதாரங்களை தங்களது மொபைல் போனிலும் கேமராக்களிலும் பதிவு செய்து கொண்டனர். இதுகுறித்து ஆய்வு குழுவிநரிடம் கேட்டபோது தாங்கள் ஆய்வு செய்த அனைத்தையும் உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பிப்போம் என தெரிவித்தனர்.

Share this to your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *