திருவாரூர் செருவளூர் தென்குடி மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டம் பூந்தோட்டம் அருகே உள்ள செருவளூர் மேலத்தென்குடியில் உள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு மாரியம்மன் கோவிலில்அருள்மிகு காத்தவராய சுவாமி ஓலை சப்பரத்துடன் தீயில் இறங்கி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
இதில் சுற்று வட்டார கிராமப் பகுதியிலிருந்து ஏராளமான பக்தர்கள் மற்றும் கிராம நாட்டாமைகள், மருளாளிகள் அரசியல் பிரமுகர்கள் எண்ணற்றோர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
இவ்விழாவில் எந்தவித அசம்பாவிதமும் நடக்காத வகையில் காவல்துறையும் தீயணைப்புத்துறையும் சிறந்த முறையில் பாதுகாப்பு வழங்கினர். இன்று மாலை 4 மணிக்கு அருள்மிகு காத்தவரய சுவாமி ஓலை சப்பரக் காட்சியோடு யதாஸ்தானம் எனும் கருவறை திரும்பும் நிகழ்வு நடைபெற உள்ளது.