கரூர் செய்தியாளர் மரியான் பாபு

இசைஞானி இளையராஜாவின் இசை மழை மே 1.. கரூரில் ராஜாவின் இசை ராஜாங்கம் என்னும் நேரடி இசை நிகழ்ச்சியை நடத்த இருப்பதாக ஸ்ரீ கோகுல் ஈவன்ஸ் நிர்வாக இயக்குனர் அஜித் ராஜா தெரிவித்துள்ளார்.

இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜா தனது லண்டன் சிம்பொனி இசை அரங்கேற்றத்திற்கு பிறகு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு நேரடியாக சென்று இசை நிகழ்ச்சி நடத்த இருப்பதாக தெரிவித்து இருந்தார்.
முதல் கட்டமாக, கரூர் திருச்சி நெடுஞ்சாலை அமைந்துள்ள கோடங்கிபட்டி பகுதியில் ராஜாவின் இசை ராஜாங்கம் என்ற தலைப்பில் இசை நிகழ்ச்சியில், இசைஞானி இளையராஜா மே 1ம் தேதி வியாழக்கிழமை மாலை 6.30 மணி அளவில் பங்கேற்க உள்ளார் .

இது தொடர்பாக கோடங்கிபட்டியில் ஸ்ரீ கோகுல் ஈவென்ஸ் சார்பில் நிகழ்ச்சிக்கான பூமி பூஜை பணிகள் துவக்க விழா நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற ஸ்ரீ கோகுல் ஈவன்ஸ் நிர்வாக இயக்குனர் அஜித் ராஜா செய்தியாளர்களை சந்தித்தார் .
அப்பொழுது தமிழக திரை உலகின் இசைஞானி இளையராஜா சிம்பொனி இசை அரங்கேற்றத்திற்கு பிறகு முதல்முறையாக தமிழகத்தில் குறிப்பாக கரூர் மாவட்டத்தில் முதல்முறையாக நடைபெறும் இசை நிகழ்ச்சியில் பங்கேற்க வருகை தர உள்ளார்.

அரங்குகள் அமைக்கும் பணி தொடங்கியுள்ளது. இதற்காக டிக்கெட் முன்பதிவு நடைபெற்று வருகிறது. இணையதளம் மூலம் இதுவரை சுமார் 10,000 பேர் டிக்கெட் புக் செய்துள்ளனர். மேலும் இணையதளம் மூலம் முன்பதிவு நடைபெற்று வருகிறது.
தொடர்ந்து இசை நிகழ்ச்சியில் பங்கேற்க வரும் இசைய ரசிகர்களுக்கு வாகன பார்க்கிங் வசதி, கழிப்பறை வசதி, கேன்டீன் வசதி, மருத்துவ மற்றும் தீயணைப்பு தடுப்பு குழுக்கள் என பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கரூர் மாவட்டம் மட்டுமல்லாது திருச்சி திண்டுக்கல் ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஏராளமான இசை ரசிகர்கள் டிக்கெட் புக் செய்து வருகின்றனர்.
இளையராஜாவின் இசை நிகழ்ச்சியில் பங்கேற்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச டிக்கெட் வழங்கப்படுகிறது. இது தவிர ஆட்டோ ஓட்டுநர்கள் தூய்மை பணியாளர்கள் லாரி ஓட்டுநர்களுக்கு 50% கட்டண சலுகை வழங்கப்பட்டுள்ளது.


ராஜாவின் இசை ராஜங்கம் எனும் இசைஞானி இளையராஜா நேரடி இசை நிகழ்ச்சியில், தமிழ்த்திரை உலகின் பின்னணி பாடகர்கள் எஸ்.பி.பி சரண், ஸ்வேதாமோகன், மதுபாலகிருஷ்ணன், கார்த்திக் உள்ளிட்ட பிரபல பின்னணி பாடகர்கள், நூற்றுக்கும் மேற்பட்ட இசைக்கலைஞர்கள் பங்கேற்கின்றனர்.
என்றார்.
இந்நிகழ்வின் போது பிரபல எலும்பு முறிவு மருத்துவர் ரஜினிகாந்த் பொறியாளர் கருணாநிதி, ஸ்ரீ கோகுல் ஈவன்ஸ் நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

Share this to your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *