மணலி மண்டல கூட்டம் மாநகராட்சி அதிகாரிகள் மீது அடுக்கடுக்காக குற்றம் சாட்டிய கவுன்சிலர்கள். பள்ளி மாணவர்கள் போல் நடந்து கொண்ட அதிகாரிகள் வேலை செய்ய தவறினால் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள் என்று எச்சரித்த வடக்கு மண்டல ஆணையர்.

திருவொற்றியூர்

மணலியில் உள்ள மண்டல அலுவலகத்தில் மண்டல குழு கூட்டம் வடக்கு மண்டல ஆணையர் ரவிக்கட்டா தேஜா முன்னிலையில் மண்டல குழு தலைவர் ஏ.வி.ஆறுமுகம் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் 15 முதல் 22-வது வரை வார்டில் உள்ள கவுன்சிலர்கள் கலந்து கொண்டு பொதுமக்கள் பிரச்சனைகளை எடுத்துக் கூறினர்.
அப்போது கவுன்சிலர்கள் மக்களுக்கு அத்தியாவசிய தேவையான குடிநீர், மின்வெட்டு, மின்விளக்கு, சாலைகள் போன்ற பிரச்சனைகளை அதிகம் உள்ளதாக கூறினர்.
இந்த புகார்களை பற்றி கவுன்சிலர்கள் மின்சாரம், மெட்ரோ வாட்டர் துறையைச் சேர்ந்த செயற் பொறியாளர்கள், பொறியாளர்கள் மற்றும் அந்தத் துறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளை செல்போன் மூலம் தொடர்பு கொண்டால் செல்போனை எடுக்காமல் அலைக்கழித்து வருவதாகவும், மக்கள் பிரச்சனைகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் தொடர்ந்து அலைக்கழித்து வருவதாகவும், கூட்டத்தின் போது இந்த மாதத்துக்குள் சரி செய்து தரப்படும் என்ற பதிலை கடந்த 3 ஆண்டுகளாக அதிகாரிகள் கூறுவதாக கவுன்சிலர்கள் அடுக்கடுக்காக குற்றம் சாட்டினர்.

இந்த பிரச்சினைகளைக் கேட்டறிந்த வடக்கு மண்டல ஆணையர் ரவிக்கட்டா தேஜா அந்தத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது முறையான பதில் கூறாமல் அவர் கேட்ட கேள்விக்கு பதில் தெரியாமல் திருத்திரு முழித்ததால் பள்ளி மாணவர்கள் போல் நடந்து கொண்ட அதிகாரிகளை வேலை செய்யவில்லை என்றால் வீட்டில் இருந்து விடுங்கள் என்று கூறினார்.

மேலும் கவுன்சிலர்கள் கூறிய அனைத்து கோரிக்கைகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லையென்றால் வேலை செய்யாத அதிகாரிகள் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்து பொதுமக்கள் பிரச்சனைகளுக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் என்று கூறினார்.

இதுவரை நடந்து முடிந்த 33 மண்டல குழு கூட்டத்தில் நேற்று நடைபெற்ற 34-வது கூட்டத்தில் பொதுமக்கள் பிரச்சனைகள் மீது அக்கறை கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுத்த வடக்கு மண்டல ஆணையர் ரவிகட்டா தேஜாவை கவுன்சிலர்கள் வெகுவாக பாராட்டினர்.

நடைபெற்ற மண்டலக்குழு கூட்டத்தில் 15வது வார்டு மாமன்ற உறுப்பினர் நந்தினி சண்முகம் அவர்கள் வார்டு வளர்ச்சி பணிகள் குறித்து கோரிக்கை வைத்தார் அதனை தொடர்ந்து வடக்கு வட்டார துணை ஆணையர் ஆய்வு செய்தார் மண்டலம் 2 வார்டு 15 மணலி புதுநகர் 80 அடி சாலையில் சாலையோர பூங்கா நடைபாதை மற்றும் சாலையில் சென்டர் மீடியன் அமைத்து மின்விளக்குகள் சென்ட்ர் மிடியனில் பெரிய தொட்டிகளில் பூச்செடிகள் வைக்க வேண்டும் என்றும் 80 அடி சாலையில் ரூபாய் 7 கோடி 50 லட்சத்தில் புதிதாக சமுதாய நலக்கூடம் விரைவில் அமைக்கப்படும் என்று ஆய்வின் போது வடக்கு வட்டார ஆணையர் தெரிவித்தார்

ஆய்வின் போது 15 வது வார்டு மாமன்ற உறுப்பினர் நந்தினி சண்முகம் மண்டல செயற் பொறியாளர் தேவேந்திரன் உதவி செயற்பொறியாளர் உதவி பொறியாளர்தெருவிளக்கு மின்சாரத்துறை உயர் அதிகாரிகள் மின்சாரத்துறை அதிகாரிகள் மற்றும் பேருந்து சாலை துறை அதிகாரிகள் இருந்தனர்.

Share this to your Friends