பள்ளிகளுக்கு இடையிலான ஒலிம்பிக் போட்டி என்று அழைக்கப்படும் ஐ எஸ் எப் வேர்ல்ட் ஸ்கூல் கேம்ஸ் போட்டியில் வாக்குவாண்டா தற்காப்பு கலையில் மொத்தம் 6 வெள்ளி பதக்கம் வென்று அசத்திய தமிழக மாணவ மாணவிகள்
செர்பியாவில் எங்களுக்கு உணவுகள் சரியாக கிடைக்கவில்லை வீரர் ஆதங்கம்
செர்பியாவில் ஏப்ரல் 4 முதல் 14 ஆம் தேதி வரை நடைபெற்ற ஐ எஸ் எப் வேர்ல்ட் ஸ்கூல் கேம்ஸ் என்று அழைக்கப்படும் பள்ளிகளுக்கு இடையிலான ஒலிம்பிக் போட்டி என்று சொல்லப்படும் போட்டியில் இந்தியா சார்பில் தமிழகத்தை சேர்ந்த மாணவ மாணவிகள் பங்கேற்றனர் இதில் 55 நாடுகளில் இருந்து 5000க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் இந்த போட்டிகலில் பங்கேற்றனர்
இந்த போட்டிகலில் பல வகையான போட்டிகள் நடைபெற்ற நிலையில் இந்தியா சார்பில் பங்கேற்ற தமிழகத்தைச் சேர்ந்த மாணவ மாணவிகள் டான்ஸ் மற்றும் தற்காப்பு கலையான வாக்குவாண்டா என்ற போட்டியில் பங்கேற்றனர் இதில் 6 வெள்ளி பதக்கம் வென்று அசத்தியது குறிப்பிடத்தக்கது
மேலும் ஒட்டுமொத்தமாக இந்திய வானத்து ஐந்தாம் இடத்தை பெற்று இருந்ததும் குறிப்பிடத்தக்கது இந்த போட்டியில் பங்கேற்பதற்காக தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஒவ்வொரு வீராங்கனைகளுக்கும் தலா இரண்டரை லட்சம் ரூபாய் வழங்கி இருந்ததும் குறிப்பிடத்தக்கது இதனைத் தொடர்ந்து சென்னை விமான நிலையம் வந்தடைந்த வீரர் வீராங்கனைகளுக்கு உறவினர்கள் தாய் தந்தையினர் என அனைவரும் சால்வை அணிவித்தும் மாலை அணிவித்தும் பூங்கொத்து கொடுத்தும் உற்சாகமாக வரவேர்த்தனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தபோது செர்பியாவில் நடைபெற்ற இந்த போட்டியில் பங்கேற்று இந்தியா சார்பில் பங்கேற்றதில் வாக்குவாண்டா என்ற தற்காப்பு கலையில் நான்கு வெள்ளி பதக்கங்களும் டான்ஸ் போட்டியில் இரண்டு வெள்ளி பழக்கங்களும் பெற்று இருந்தது மகிழ்ச்சி அளிக்கிறது
என்றும் தெரிவித்தனர் மேலும் சிற்பியாவில் உணவு முறைகள் மட்டும் எங்களுக்கு சரியாக கிடைக்கவில்லை என்றும் இந்திய உணவுகள் கிடைக்கவில்லை என்றும் தெரிவித்தனர் மேலும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று வெள்ளி பதக்கம் வெல்வது லட்சியம் என்றும் தெரிவித்தனர் இதனைத் தொடர்ந்து பேசிய பயிற்சியாளர்கள் தமிழக அரசிற்கும் தமிழக விளையாட்டு துறை அமைச்சரும் துணை முதலமைச்சர் ஆன உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு நன்றிகளை தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது.