தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420

திருப்பூர் தெற்கு மாவட்ட தேமுதிக செயலாளராக வழக்கறிஞர் பன்னீர்செல்வம் நியமனம் .

தாராபுரம்,
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- திருப்பூர் தெற்கு மாவட்ட கழக செயலாளராக தாராபுரத்தை சேர்ந்த வழக்கறிஞர் கே.பன்னீர் செல்வம் நியமிக்கப்பட்டுள்ளார்.அவருக்கு மாவட்டம், ஒன்றியம், நகரம், பேரூர், வார்டு, ஊராட்சி, கிளைகழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் கழக தொண்டர்கள் என அனைவரும் முழு ஒத்துழைப்பு தந்து தேசிய முற்போக்கு திராவிட கழகம் தங்கள் மாவட்டத்தில் சிறப்பான வளர்ச்சி பெற பாடுபட வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது

இந்த நிலையில் புதிய தே.மு.தி.க திருப்பூர் தெற்கு மாவட்ட கழக செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள வழக்கறிஞர் கே.பன்னீர் செல்வத்தை மாவட்ட பொருளாளர் அண்ணாதுரை, துணைச் செயலாளர் கந்தசாமி, தாராபுரம் ஒன்றிய செயலாளர் நவநீதகிருஷ்ணன், உடுமலை நகர செயலாளர் ராமச்சந்திரன், ஒன்றிய செயலாளர் ராஜ கருணாகரன், மாவட்ட மகளிர் அணி செயலாளர் சர்மிளா மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், ஊராட்சி, கிளைகழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் கழக தொண்டர்கள் என ஏராளமானோர் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

கே பன்னீர்செல்வம் பி ஏ பி எல் வழக்கறிஞர் தாராபுரம் சொந்த ஊர் மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கணியூர் செல்வராணி என்ற மனைவியும் கிருஷ்ணகுமார் 18 வயது அரவிந்த் 16 வயது மகன்கள் உள்ளார்கள்.

கேப்டன் மன்றம் ஆரம்பித்தபோது இருந்து மன்றத்தில் செயல்பட்டு கழகம் ஆரம்பித்த 2005 ஆம் வருடம் திருப்பூர் தெற்கு மாவட்ட கழக வழக்கறிஞர் அணி துணை செயலாளராகவும் 2016 ஆம் ஆண்டு முதல் மாவட்ட கழக பொருளாளராகவும் 2021 ஆம் ஆண்டு முதல் மாவட்ட கழக தலைவராகவும் பணியாற்றியவர் தாராபுரத்தில் பிரபல வழக்கறிஞர்களில் ஒருவர்.

Share this to your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *