தற்போது உடல் ஆரொக்கியத்தில் தூக்கத்தின் அவசியம் குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வருவதால், பெப்ஸ் நிறுவனம் நல்ல தரமான சொகுசான மெத்தைகளை தொடர்ந்து அறிமுகம் செய்து வருவதாக பெப்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜி. சங்கர் ராம் கோவையில் தெரிவித்துள்ளார்…
மெத்தை தயாரிப்புகளில் இந்திய அளவில் முன்னனி நிறுவனமான பெப்ஸ் நிறுவனம் தனது புதிய மெத்தைகளை அறிமுகம் செய்துள்ளது..
நிம்மதியான தூக்கத்திற்கு தீர்வு அளிக்கும் வகையில் நவீன மற்றும் உலகத்தரத்தில் பிரத்யேக வடிவமைப்புகளுடன் பெப்ஸ் மெத்தைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது..
இதற்கான அறிமுக விழா கோவை அவினாசி சாலையில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டல் அரங்கில் நடைபெற்றது..
இதில், பெப்ஸ் இண்டஸ்ட்ரீஸின் இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஜி. சங்கர் ராம்,கலந்து கொண்டு புதிய மெத்தைகளை அறிமுகம் செய்து வைத்தார்..
தொடர்ந்து பெப்ஸ் நிறுவனம் மற்றும் புதிய அறிமுக தயாரிப்புகள் குறித்து அவர் பேசுகையில், தமிழ்நாட்டில் எங்கள் புதிய மெத்தை சேகரிப்புகளை அறிமுகப்படுத்துவதில் பெருமை கொள்வதாக கூறிய அவர்,புதிய பெப்ஸின் புதிய தயாரிப்புகள் நிம்மதியான தூக்கத்தை தர அதி நவீன தொழில் நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்..
குறிப்பாக சமீபத்திய வரிசையான பெப்ஸ் கம்ஃபோர்ட், பெப்ஸ் சுப்ரீம் மற்றும் பெப்ஸ் ரெஸ்டோனிக் மெமரி ஃபோம் ஆகியவை வாடிக்கையாளர்களுக்கு புதிய அனுபவத்தை தரும் என நம்பிக்கை தெரிவித்தார்..
தற்போது உடல் ஆரொக்கியத்தில் தூக்கத்தின் அவசியம் குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வருவதால், இந்திய நுகர்வோரின் தனித்துவமான தேவைகளுக்கு ஏற்ப உலகத் தரம் வாய்ந்த தயாரிப்புகளை பெப்ஸ் தொடர்ந்து வழங்குவதாக அவர் தெரிவித்தார்…