செய்தியாளர்: பா. சீனிவாசன், வந்தவாசி.
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த சி.ம.புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஓட்டப்பந்தயம், நொண்டி ஓடுதல், தவளை ஓட்டம், கோணிப்பை ஓட்டம், தண்ணீர் நிரப்புவது, எலுமிச்சம் பழம் எடுத்துச் செல்லுதல் உள்ளிட்ட பல்வேறு பந்தயங்கள் நடத்தப்பட்டு முதல், இரண்டாம், மூன்றாம் நிலை பரிசுகள் வழங்கப்பட்டது.

சிறப்பு அழைப்பாளராக, ஆசிரியர் பயிற்றுனர் சுப.தமிழ்நேசன் பங்கேற்று மாணவர்களை வாழ்த்தி பரிசுகளை வழங்கினார். மேலும் பள்ளி தலைமை ஆசிரியர் டி.ஆர்.நம்பெருமாள், பள்ளி மேலாண்மை குழு தலைவர் தமிழ்ச்செல்வி, துணைத் தலைவர் துர்கா தேவி, பள்ளி ஆசிரியை அகிலாண்டம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் அறுசுவை சைவ உணவு வழங்கப்பட்டது