திருவாரூர் செய்தியாளர்
வேலா செந்தில்,
திருவாரூர் அருகே 108 திவ்ய தேசங்களில் ஒன்றான பக்தவச்சல பெருமாள் ஆலயத்தில் புதிய தேர் வெள்ளோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது.
திருவாரூர் அருகே திருக்கண்ணமங்கை கிராமத்தில் 81 லட்சத்தி 80 ஆயிரம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட புதிய மரத்தேர் கட்டப்பட்டது இதன் தொடர்ச்சியாக இன்று புதிய தேர் வெள்ளோட்டம் பெருந்திரளான பக்தர்கள் பங்கேற்று வடம் பிடித்து இழுக்கப்பட்டது.
அப்போது பக்தவச்சலா கோவிந்தா என முழக்கம் எழுப்பி ஆர்வத்துடன் நான்கு வீதிகளையும் இப்போது மக்கள் வடம் பிடித்து இழுத்தனர்.
இதில் தீயணைப்பு துறையினர் காவல்துறை சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்ற பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.