கோவை

அமைச்சர் பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்குவதற்கு கவர்னரிடம் மனு அளிக்க உள்ளதாக இந்து முன்னணியின் மாநில பொதுச் செயலாளர் கிஷோர் குமார் தெரிவித்துள்ளார்…

சில தினங்களுக்கு முன்பு அமைச்சர் பொன்முடி பெண்கள் பற்றி பேசியது சர்ச்சைக்கு உள்ளான நிலையில் எதிர்க்கட்சியினர் பலரும் அமைச்சர் பொன்முடியை கண்டித்து தொடர்ந்து ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக இந்து அன்னையர் முன்னணி சார்பில் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டம் சார்பில் தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பெண்கள் உட்பட சுமார் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு அமைச்சர் பொன்முடியை கண்டித்தும் அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வலியுறுத்தியும் கண்டன முழக்கங்களை எழுப்பினர். மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக மற்றும் அமைச்சர் பொன்முடியை கண்டித்து பதாகைகளை ஏந்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இது குறித்து பேட்டி அளித்த இந்து முன்னணி மாநில பொதுச் செயலாளர் கிஷோர்குமார்சமீப நாட்களாகவே திமுகவின் தலைவர்கள் இந்து மதத்தையும் இந்து மத வழிபாடுகளையும் ப கொச்சையாக பேசி வருவதாகவும் அமைச்சர் பொன்முடி பதவி ஏற்கும் பொழுது இந்திய இறையாண்மையை பேணி காப்பேன் என்று உறுதிமொழி ஏற்றுக்கொண்ட நிலையில் தற்போது ஒரு மதத்தை இழிவு படுத்தி பேசுவது சரியா என கேள்வி எழுப்பினார்.

மேலும் அமைச்சர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் புகார் அளித்தும் வழக்குப்பதிவு செய்யப்படவில்லை எனவும் தெரிவித்த அவர் அமைச்சர் பொன்முடி மீது சட்டரீதியான நடவடிக்கை எடுத்து அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் நடவடிக்கை எடுக்காவிட்டால் கவர்னரிடம் மனு அளிக்க உள்ளோம் என தெரிவித்தார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் தசரதன், செய்தி தொடர்பாளர் தனபால் அன்னையர் முன்னணி மகேஸ்வரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Share this to your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *