இந்தியா முழுவதும் பணியின் போது உயிர் நீத்த தீயணைப்புத்துறை வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்தில் நேற்று நடைபெற்றது. தமிழ்நாடு தீயணைப்பு துறையில் தீ விபத்து மற்றும் மீட்பு பணியின் போது உயிர் நீத்த அலுவலர்கள், பணியாளர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 14- ஆம் நாள் நீத்தார் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. அதன்படி திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்தில் நடைபெற்ற நீத்தார் நினைவு நாள், தீத் தொண்டு நாள் வார விழா நிகழ்ச்சி திருவாரூர் மாவட்ட அலுவலர் அக்கீம் பாட்ஷா உத்திரவின்படி வலங்கைமான் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்தில் நிலைய அலுவலர் பார்த்திபன் தலைமையில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையில் பணியாற்றும் போது உயிர் நீத்தவர்களுக்காக தீத் தொண்டு நாள் விழா அனுசரிக்கப்பட்டது.
அதேபோல் பொதுமக்கள் கூடும் இடங்களான பஸ் நிலையம் ஆகிய இடங்களில் தீ தடுப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை தீயணைப்பு துறையினர் வழங்கினர்.