எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி

சீர்காழி அருகே நான்கு வழிச்சாலையில் மேம்பாலம் அமைத்து தரக் கோரி கிராம மக்கள் சாலை மறியல் போராட்டம். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை குண்டு கட்டாக கைது செய்த காவல்துறையினர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த புத்தூர் ஆனந்த கூத்தன் பகுதியில் உள்ள நான்கு வழிச்சாலையில் மேம்பாலம் அமைத்து தரக் கோரி ஆனந்த கூத்தன், கடுக்காய் மரம்,சோதியக்குடி, மடப்புரம்,சிதம்பரநாதபுரம், கொண்ணங்காட்டு படுகை, கீரங்குடி, மாதிரவேளூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த கிராம மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான 4 வழிச்சாலையில் மேம்பாலம் அமைத்து தர கோரிக்கை விடுத்து வந்த நிலையில் பூண்டியாங்குப்பம் முதல் சட்டநாதபுரம் வரை நான்கு வழி சாலையில் பணிகள் முடிந்து போக்குவரத்து பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டள்ளது.
இன் நிலையில் ஆனந்தகூத்தன் பகுதியில் 20 க்கும் மேற்பட்ட விபத்துகள் நான்கு வழி சாலை சந்திப்பில் நடைபெற்றதால் மேம்பாலம் அமைத்து தர கோரி 200க்கும் மேற்பட்ட கிராம மக்கள் 4 வழிச்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடையே சீர்காழி கோட்டாட்சியர் சுரேஷ், காவல் துணை கண்காணிப்பாளர் அண்ணாமலை மற்றும் அரசியல் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்
பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில் காவல் துறையினர் குண்டு கட்டாக தூக்கி கைது செய்ய முற்பட்ட பொழுது போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது அதனைத் தொடர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்ட ஆண்கள் பெண்களை போலீசார் வலுக்கட்டாயமாக வாகனத்தில் ஏற்றி கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது