மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் தீயனைப்புதுறை சார்பில் தீ விபத்தில் உயிரிழந்த தீயணைப்பு வீரர்களுக்கு தீ தொண்டு நினைவு நாள் ஆண்டும் ஏப்ரல் 14ந் தேதி அனுசரிக்கப்படுகிறது.அதனைத் தொடர்ந்து நேற்று நிலைய அலுவலர் சந்தானம் தலைமையில் பணியாளர்கள் தீ விபத்தில்லாத இந்தியாவை உருவாக்கிட ஒன்றிணைவோம் என்ற உறுதிமொழியுடன் தீ தொண்டு நாள் அனுசரிக்கப்பட்டது.
பின்னர் தீயணைப்புதுறை சார்பில் இந்த வாரம் முழுவதும் தீ தொண்டு வாரம் அனுசரிக்கப்பட்டு அலங்காநல்லூர் பகுதியில் உள்ள அரசு அலுவலகங்கள்,பள்ளிகள், பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தீ விழிப்புணர்வு துண்டு பிரச்சாரம் வழங்கியும் போலி ஒத்திகை பயிற்சி செய்து காண்பித்தும் வருகின்றனர்.