கோவையில் ஸ்ரீ தாய் மூகாம்பிகை அம்மன் கோவிலில் 15 ஆம் ஆண்டு ஸம்வத்ஸர அபிஷேகம் மற்றும் விசேஷ மஹா சண்டி ஹோமம் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
கோவை இடையர்பாளையம் பகுதியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ தாய் மூகாம்பிகை அம்மன் கோவில் உள்ளது. சக்தி வாய்ந்த இந்த கோவிலுக்கு தமிழகம் முழுவதும் இருந்து பக்தர்கள் வழிபட்டு செல்கின்றனர்.
இந்த நிலையில் ஸ்ரீ தாய் மூகாம்பிகை அம்மன் கோவிலில் 15 ஆம் ஆண்டு ஸம்வத்ஸர அபிஷேகம் மற்றும் விசேஷ மஹா சண்டி ஹோமம் விழா கடந்த 11 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை நடைபெற்று வருகிறது.
ஸ்ரீ தாய் மூகாம்பிகை டிரஸ்ட் சார்பாக மணிகண்ட சிவாச்சாரியார் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் முளைப்பாரி எடுத்து வருதல்,கணபதி ஹோமம்,முதல் கால நவாச்சரி ஜப ஹோமம்,இரண்டாம் கால சண்டி ஹோமம்,குமாரி பூஜை, பிரம்மச்சாரி பூஜை,கன்னிகா பூஜை,சுமங்கலி பூஜை, பூர்ணாஹதி கலசம் புறப்பாடு,கலச அபிஷேகம்,தீபாராதனை,அன்னதானம், திருகல்யாணம், மூகாம்பிகை அம்மனுக்கு பால்குடம் அபிஷேகம், அம்மன் திரு வீதி உலா உள்ளிட்டவை நடைபெற்றது.தொடர்ந்து திருவிளக்கு வழிபாடு தீபாராதனை பிரசாதம் வழங்குதல் உள்ளிட்டவை நடைபெறுகிறது.
இந்த கோவிலில் நடைபெற்ற விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபாடு செய்தனர்.
தொடர்ந்து அகில உலக ஆதி சைவ