மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே மங்கைநல்லூரில் குத்தாலம் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் நீர்மோர் பந்தல் அமைப்பு:- அமைச்சர் மெய்யநாதன் திறந்து வைத்தார்:-

சித்திரை மாதம் தொடங்கியுள்ள நிலையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது100 டிகிரி வரை கொளுத்தும் வெயிலால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

இந்நிலையில் கோடையின் வெப்பத்தை பொதுமக்கள் சமாளிக்கும் வகையில் மயிலாடுதுறை மாவட்டம் மங்கைநல்லூரில் திமுக குத்தாலம் கிழக்கு ஒன்றியம் சார்பில் நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டது.

மாவட்ட செயலாளரும், பூம்புகார் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன் தலைமையில் நடைபெற்ற விழாவில், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் கலந்து கொண்டு நீர்மோர், சர்பத், தர்பூசணி ஆகிய உடலுக்கு குளிர்ச்சியூட்டும் நீர்ச்சத்துடைய பொருட்களை பாதசாரிகள், ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கினார்.

இதில் திமுக ஒன்றிய செயலாளர் மங்கை சங்கர் மற்றும் திமுகவினர் கலந்து கொண்டனர். இதேபோல செம்பனார்கோவிலிலும் திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது.