கோவை
பொள்ளாச்சியில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தனியார் பேருந்தில் பயணிக்க இலவசம் – பொதுமக்கள் மகிழ்ச்சி..
உலகத் தமிழர்களின் முக்கியமான கொண்டாட்டங்களில் ஒன்றான தமிழ் வருடப்பிறப்பு,தமிழ் புத்தாண்டு ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் 14ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது.சித்திரை 1ஆம் தேதியை முன்னிட்டு மக்கள் காலையில் இருந்து உற்சாகத்துடன் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் தமிழுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், ஆங்கில புத்தாண்டை மறந்து தமிழ் புத்தாண்டை நினைகூறும் விதமாகவும்,கோவிலுக்கு செல்லும் மக்கள் பயன்பெறும் விதமாக கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இயக்கப்பட்டு வரும் சிவன் மலை எனும் தனியார் பேருந்து பொதுமக்களுக்கு ஒருநாள் இலவச பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
பொள்ளாச்சி முதல் செட்டிக்காபாளையம் வரை செல்லும் இந்த பேருந்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பயன்பெறுவார்கள் என நடத்துநர் தெரிவித்துள்ளார்.இந்த தனியார் பேருந்தின் இலவச பயணத்தால் பொதுமக்கள் பலரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.