தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல் :9715328420
தாராபுரத்தில் அம்பேத்கர் 134-வது பிறந்த நாள் விழாவையொட்டி திமுகவினர். பழைய நகராட்சி அலுவலகத்தில் திமுக அலுவலகம் முன்பு அம்பேத்கரின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
அதன் பிறகு தீண்டாமை ஒழிப்பு குறித்து உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் தாராபுரம் நகர செயலாளர் முருகானந்தம் தலைமை வகித்தார். நகர் மன்ற தலைவர் பாப்பு கண்ணன் முன்னிலை வகித்தார். இதற்கு முன்னதாக அனைவரும் சமமே ஜாதி மத பேதம் இன்றியும் தீண்டாமைக்கு எதிராகவும் 70-க்கும் மேற்பட்டோர் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் திமுகவினர் விசி கவினர்.தமிழ் புலி கட்சியினர் மற்றும் கூட்டணி கட்சியினர் ஏராளமானவர் கலந்து கொண்டனர்.