கண்டமங்கலம்,
விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றிய புதிய பி.டி.ஓ.,க்களாக ரா.சண்முகம், ஆர்.வெங்கடசுப்ரமணியன் ஆகியோர் பொறுப்பேற்றனர்.
கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றிய, வட்டார வளர்ச்சி அலுவலகத்தில், வட்டார ஊராட்சி பி.டி.ஓ., வாக பணியாற்றி வந்த மணிவண்ணன், வானுார் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு கிராம ஊராட்சி பி.டி.ஓ.,வாக இடமாற்றம் செய்யப்பட்டார்.
அவருக்கு பதிலாக முகையூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கிராம ஊராட்சி பி.டி.ஓ.,வாக பணியாற்றி வந்த ரா.சண்முகம் கண்டமங்கலம் வட்டார ஊராட்சி பி.டி.ஓ.,வாக பொறுப்பேற்றார்.

அதேபோல் கண்டமங்கலம் கிராம ஊராட்சி பி.டி.ஓ.,வாக பணியாற்றி வந்த ராஜவேலு இடமாற்றம் செயசெய்யப்பட்டு, விழுப்புரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக கண்காணிப்பாளராக பொறுப்பேற்றார். அங்கு கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த ஆர்.வெங்கடசுப்ரமணியன் கண்டமங்கலம் கிராம ஊராட்சி பி.டி.ஓ.,வாக பொறுப்பேற்றார். புதிதாக பொறுப்பேற்றுள்ள பி.டி.ஓ.,க்களுகளுக்கு ஒன்றிய சேர்மன் வாசன், ஊராட்சி தலைவர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், துணை பி.டி.ஓ.,க்கள் மற்றும் அலுவலர்கள், ஊழியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

Share this to your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *