காயல் பட்டிணம் : ஏப்.12
இது குறித்து மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது .
அ தி மு க முன்னாள் பொதுச்செயலாளர் மறைந்த அம்மையார் ஜெயலலிதா பா ஜ கவுடன் கூட்டனி வைத்த போது சட்ட மன்ற தேர்தலில் படு தோல்வி சந்தித்தார். தமிழக மக்களின் மன நிலை நன்கு அறிந்த ஜெயலலிதா இனிவரும் காலங்களில் ஒரு போதும் பா ஜ கவுடன் கூட்டனி வைத்து கொள்ள மாட்டோம் என்று தமிழக மக்களுக்கு உறுதியான வாக்குறுதியை கொடுத்தார் . ஜெயலலிதா கொடுத்த வாக்குறுதியை நம்பி தமிழக மக்கள் சட்டமன்ற தேர்தலில் வாக்களித்தனின் விலைவாக மாபெரும் வெற்றி பெற்று அன்றே தமிழகத்தில் மீண்டும் ஆட்சி அமைத்தார். மேலும் தமிழகத்தில் ஆட்சி அமைத்தாலும் பா ஜ கவுடன் கூட்டனி வைக்காமல் தமிழக மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை மிராமல் கடைசி வரையிலும் காப்பாற்றியவர் ஜெயலலிதா.
ஆனால் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் தனது சுயலாபத்திற்க்காக பா ஜ கவுடன் கூட்டனி வைத்ததின் விலைவாக சட்ட மன்ற தேர்தலில் படு தோல்வியை சந்தித்த எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் 2026 சட்ட மன்ற தேர்தலை சந்திக்க பா ஜ கவுடன் கூட்டனி வைத்தால் தமிழகத்தில் அ தி மு க ஆட்சியை அமைக்க போகிறதா ஒரு போதும் இல்லை ஏனென்றால் பா ஜ கவுடன் கூட்டனி வைத்த கருணாநிதி மற்றும் – ஜெயலலிதா ஆளுமையான தலைவர்கள்னாலையே தமிழகத்தில் ஆட்சியை அமைக்க முடிய வில்லை அப்படி இருக்க எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி அமைத்திருவாரா வேடிக்கையாதான் பார்க்க முடிகிறது .
மேலும் 2026லில் நடை பெற இருக்கின்ற சட்ட மன்ற தேர்தலில் அ தி மு க வரலாறு கானாத தோல்வியை சந்திக்கும் .
மேலும் அ தி மு க வை நம்பி வாக்களித்த இஸ்லாமியர்களுக்கு எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் செய்த துரோகங்கள் கொஞ்சம் நஞ்சம் இல்லை இதனை இஸ்லாமியர்கள் ஒரு போதும் மறக்க மாட்டார்கள் .மேலும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் பத்திரிக்கையாளர் சந்திப்பில் அ தி மு க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சட்ட மன்ற தேர்தலில் பா ஜ கவால் படு தோல்வியை சந்தித்தேன் மீண்டும் எடப்பாடி பழனிச்சாமி பிஜேபிவுடன் கூட்டனி வைத்தால் அ தி மு க வை விட்டு விலகுவேன் என்று பேசினார். மீண்டும் அ தி மு க – பா ஜ கவுடன் கூட்டனி என்று தெரிந்தவுடன் அ தி மு க வை விட்டு ஜெயக்குமார் விலகியதாக தவகல் வெளியாகி உள்ளன. பேசிய வார்த்தையை காப்பாற்றியவர் ஜெயக்குமார். அதேபோல் பத்திரிக்கையாளர் சந்திப்பில் மீண்டும் அ தி மு கவுடன் பா ஜ க கூட்டனி வைத்தால் பா ஜ கவிலிருந்து விலகுவேன் என்று பேசிய முன்னால் மாநில தலைவர் அண்ணாமலை பா ஜ க விட்டு எப்போது விலக போகிறார். என்பதை சற்று பொறுத்திருந்து பார்ப்போம் இவ்வாறு காயல் அப்பாஸ் கூறியுள்ளார்.