எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி
சீர்காழி அருகே பெருமங்கலம் கிராமத்தில் சட்ட மாமேதை அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் ரத்ததான முகாம் நடைபெற்றது
நாடு முழுவதும் இந்திய அரசியலமைப்பு சட்ட மாமேதை புரட்சியாளர் டாக்டர் பி. .ஆர் ..அம்பேத்கர் அவர்களின் 135 வது பிறந்தநாள் முன்னிட்டு
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பெருமங்கலம் கிராமத்தில் புரட்சியாளர் டாக்டர் பி. ஆர்.அம்பேத்கர் இளைஞர் நற்பணி மன்றம் சார்பாக முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் சோனியா காந்தி இளமுருகன் தலைமையில் மூன்றாம் ஆண்டு மாபெரும் ரத்ததான முகாம் நடைபெற்றது.
முகாமினை தனிப்பிரிவு குற்ற புலனாய்வு துறை உதவி ஆய்வாளர் பாபுராஜா ரத்ததான முகாமினை துவங்கி வைத்தார்.இதில் சீர்காழி அரசு மருத்துவமனை மருத்துவர் அறிவழகன் மற்றும் புரட்சியாளர் டாக்டர் பி. ஆர்.அம்பேத்கர் இளைஞர் நற்பணி மன்றம் இளைஞர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு ரத்ததானம் வழங்கினர்.