திருச்சி
திருச்சியில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்டம் திருச்சி மண்டலத்தின் சார்பில் அலுவலக வளாகத்தில் டாக்டர் அம்பேத்கரின் பிறந்தநாள் உறுதி மொழி எடுக்கப்பட்டது.இந்திய விடுதலைக்கு அண்ணல் அம்பேத்கர் இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராக பதவி ஏற்று இந்திய அரசியலமைப்பு வரைவு குழுவிற்கு தலைமை தாங்கி அரசியலமைப்புச் சட்டத்தை வகுத்து கொடுத்தார்.எனவே அண்ணல் அம்பேத்கரின் பிறந்த நாளான ஏப்ரல் மாதம் 14-ந் தேதியை சமத்துவ நாளாக கொண்டாட தமிழ் நாடு முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளதை தொடர்ந்து அன்றைய தினம் விடுமுறை என்பதால் (ஏப்ரல் -11) திருச்சி மண்டல பொது மேலாளர் முத்துகிருஷ்ணன் தலைமையில் “சகமனிதர்களை சாதியின் பெயரால் ஒரு போதும் அடையாளம் காண மாட்டேன் என்று சமத்துவ நாள் உறுதிமொழி எடுக்கப்பட்டது.
இந்த உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சியில் துணை மேலாளர் ராமநாதன் (பணியாளர் மற்றும் சட்டம் ),மற்றும் போக்குவரத்து கழக பணியாளர்கள் கலந்து கொண்டு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்