கரூரில் 2 திரையரங்குகளில் விஜய் நடித்த சச்சின் திரைப்படம் ரீ ரிலீஸ் – 100 ஆதரவற்ற குழந்தைகளுக்கு தவெக சார்பில் சிறப்பு காட்சி ஏற்பாடு, பட்டாசு வெடித்து, கேக் வெட்டி குழந்தைகளுக்கு வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
சமீபகாலமாக தமிழகத் திரையுலகில் வெற்றி பெற்ற திரைப்படங்கள் மீண்டும் ரீ ரிலிஸ் செய்யப்படுகிறது சினிமா ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளதால், விஜய் நடித்த கில்லி திரைப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி வரவேற்பை பெற்றது.
திரையரங்கு உரிமையாளர்களுக்கும் கணிசமான லாபம் கிடைத்தாக கூறப்படுகிறது. குறிப்பாக விஜய் நடித்த திரைப்படங்களுக்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வரவேற்பு இருக்கும் என்பதால், தற்பொழுது கோடைகால விடுமுறை துவங்குவதற்கு சில நாட்களுக்கு முன்பே சச்சின் திரைப்படம் ரீ ரிலீஸ் செய்யப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.
இதன் தொடர்ச்சியாக நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் நடித்த “சச்சின்” திரைப்படம் தமிழகம் முழுவதும் மீண்டும் வெளியாகியது. கரூர் மாநகரில் பொன்அமுதா மற்றும் எல்லோரா ஆகிய 2 திரையரங்கில் வெளியாகியது.
அதனை முன்னிட்டு, பொன்அமுதா திரையரங்கம் முன்பு, தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சியின் கரூர் மேற்கு மாவட்ட செயலாளரும், நடிகர் விஜய் ரசிகர் மன்ற தலைவருமான மதியழகன் தலைமையில், கேக் வெட்டி குழந்தைகளுக்கு வழங்கியும், பட்டாசுகள் வெடித்தும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த திரைப்படத்தை காண வெள்ளியணை ஸ்ரீ ராகவேந்திரா பள்ளியில் பயிலும் , சுமார் 100 ஆதரவற்ற குழந்தைகளுக்கு இலவச காட்சி ஏற்பாடு செய்யப்பட்டு அழைத்து வந்தனர்.
குழந்தைகளுடன், பொதுமக்கள், தமிழக வெற்றி கழகத்தின் மாவட்ட பொருளாளர் ஆறுமுகம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் லோகு, கரூர் நகர செயலாளர் கனகராஜ், மகளிர் அணி அமைப்பாளர் நித்தியா உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் திரைப்பட ரசிகர்கள் பலர் கலந்து கொண்டனர்