மதுரை வீரகாளியம்மன் கோயில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு, வைகை ஆற்றில் இருந்து பால்குடம், பறவை காவடி எடுத்துக்கொண்டு ஏராளமான பக்தர்கள் ஊர்வலமாகச் சென்றனர்.
மதுரை ஜெய்ஹிந்த்புரத்தில் உள்ள வீரகாளி யம்மன் கோயிலில் 73வது ஆண்டு பங்குனி உற்சவ விழா கொடியேற்றம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து காப்பு கட் டும் நிகழ்வும், அம்மனுக்கு தினமும் காலை, மாலை சிறப்பு பூஜைகளும் நடை பெற்றது. இந்நிலை யில் விழாவின் சிகர நிகழ்வாக ஆயிரக்கணக்கான பக்தர்கள் வைகை ஆற்றில் இருந்து தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றும் வகையில் வீரகாளியம்மன் கோயிலுக்கு அலகு குத்தி யும், பால் குடம், பறவை காவடி எடுத்தும் ஊர்வல
மாகச் சென்றனர்.
இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றதால் நகரில் சிம்மக்கல் உள்ளிட்ட பகுதிகளில் சாலைகள் முழுவதிலும் திருவிழா கோலத்துடன் காட்சியளித்தது. இதன் தொடர்ச்சியாக வீரகாளி யம்மன் கோயிலில் ஊர்ப் பொங்கல், அக்னிச்சட்டி, முளைப்பாரி ஊர்வலம் இதனைத்தொடர்ந்து திருவிளக்கு பூஜை நடைபெற்றது.