இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகா அலுவலகம் அருகே அமைந்துள்ள சுப்பிரமணிய சுவாமி கோவில் 90 ஆம் ஆண்டு பங்குனி உத்திரம் மண்டகப்படி 8 ஆம் நாள் நிகழ்ச்சியான தேரோட்டம் சிவயோகிகள் சமுதாயத்தின் சார்பாக சிறப்பாக நடைபெற்றது. தேரோட்டம் கெளரவ தலைவர் குருஜீ குமரகுரு, தலைவர் செல்வகதிர் வேல், துணைத் தலைவர் மாரி, தலைமையில் செயலாளர் சக்திவேல், பொருளாளர் பூமிநாதன், சமுதாய அமைப்பாளர் கந்தசாமி, ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
லிங்கநாதன், அசோக்ராஜா, சதீஷ்குமார், இளவரசன் ஆகியோர் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தனர். இதில் சிவயோகிகள் சமுதாய முன்னாள் மற்றும் இந்நாள் நிர்வாகிகள், பெரியோர்கள், இளைஞர்கள், பெண்கள் ஏராளமானோர் தேரோட்டத்தில் கலந்து கொண்டு ஊர்வலமாக சென்றனர். பொது மக்கள் வழிபாடு செய்தனர்.