புதுக்கோட்டை மாவட்டம் கொன்னையூர் முத்து மாரியம்மன் கோயில் திருவிழாவில் அனைத்திந்திய இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பாக மாபெரும் நீர் மோர் & அன்னதான விழா நடைபெற்றது.
இந்த விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக ஆன்மீக செம்மல் வி.செல்வராஜ் அவர்கள் கலந்து கொண்டு அன்னதான விழாவை தொடங்கி வைத்தார்.சிறப்பு விருந்தினர்களாக திரு.எம். செல்வராஜ் இன்ஜினியர், முன்னாள் ஊராட்சி ஒன்றிய துணைச் சேர்மன் தனலட்சுமி, நந்தினி அச்சகம் திரு.. பாஸ்கர் , திரு.முத்தையாச்செட்டியார் , தொட்டியம் பட்டி ஊராட்சி மன்ற தலைவர் திரு.சோலையப்பன் , திரு.மலைசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.இந்த மாபெரும் நீர் மோர் மற்றும் அன்னதான விழா ஏற்பாடுகளை அனைத்து இந்திய திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்கத்தின் மாநில மகளிர் அணி கௌரவத் தலைவர் திருமதி.எஸ்.சுசிலா செல்வராஜ் மற்றும் மாநில கௌரவச்செயலாளர் திரு.பூபதி என்கிற முத்துக்குமார்,
ஒன்றிய செயலாளர் திரு கே. சுந்தரேஸ்வரன் மற்றும் திருமதி.நாகராணி, மற்றும் சாந்தி உட்பட பல பொறுப்பாளர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்.