தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.
ஜோ.லியோ யாக்கோப் ராஜ்.

தஞ்சாவூர், ஏப்- 9. தஞ்சாவூரில் டாடா குழுமத்தின் தனிஷ்க் ஷோரூம் தஞ்சை – புதுக்கோட்டை சாலை யாகப்பாநகரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. இது தஞ்சையில் தனிஷ்க் ஷோரூமின் 2-வது கிளை தனிஷ்க் சிலலறை விற்பனை பிரிவின் இணை துணைத்தலைவர் சுனில்ராஜ் திறந்துவைத்து விற்பனையை தொடங்கி வைத்தார்.

விழாவிற்கு புண்ணியமூர்த்தி பிள்ளை டிபார்ட்மெண்ட் ஷோரூம் உரிமையாளர் குணசீலன், தனிஷ்க் ஷோரும் கிளை உரிமையாளர் தினேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மண்டல வணிக மேலாளர் சந்திரசேகர் வரவேற்புரையாற்றினார்.
பிரிவின் இணை துணைத்தலைவர் சுனில்ராஜ் கூறியது, திறக்கப்பட்டுள்ள தனிஷ்க் ஷோரூம் இந்தியாவில் 501-வது கிளை ஆகும். தமிழகத்தில் 63-வது கிளை ஆகும். இந்த விற்பனை நிலையத்தில் தங்கம், வைரம், குந்தன், போல்கி மற்றும் சம கால வடிமைப்புகள் உள்ளிட்ட பல் வேறு வகையான நகைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு நகைகள் விற்பனைக்கு உள்ளன. மேலும் சோழர் மரபு, கம்பீரமான சின்னங்களை மீண்டும் உயிர்ப்பிக்கும் வகையில் நகைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

புதிய கிளை திறப்பு விழா வையொட்டி வாடிக்கையாளர்களுக்கு சலுகைகளும் அறி விக்கப்பட்டுள்ளது. அதன்படி வாடிக்கையாளர்கள் வாங்கும் ஒவ்வொரு நகைக்கும் இலவச தங்க நாணயம் புதன்கிழமை வரை வழங்கப்படுகிறது. மேலும் உள்ளூர் கலாசரங்களை அடிப்படையாக கொண்டு வடிவமைக்கப்பட்ட நகை தொகுப்புகளை தனிஷ்க் ஷோரூமில் நீங்கள் பார்த்து தேர்ந்தெடுக்கலாம் என்றார் .

   விழாவில் தொழி லதிபர் ஆஷிப்அலி, முக்கிய பிரமுகர்கள் மணிமாறன், பத்மநாபன், கோவிந்தசாமி என்ற ரவி, டாக்டர் மோகன்தாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர். பகுதி மேலாளர் ரத்தீஷ் நன்றி கூறினார்.
Share this to your Friends