திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் கடைவீதியில் தமிழ்நாடு அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை எந்த காரணமும் இன்றி கிடப்பில் போட்ட ஆளுநருக்கு எதிராக சட்ட போராட்டம் நடத்தி சட்டமன்ற மசோதாக்கள் மீது ஆளுநர் முடிவெடுக்க காலக்கெடு நிர்ணயம் செய்து, தமிழக அரசு நிறைவேற்றிய 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கி பெறப்பட்ட தீர்ப்பினை கொண்டாடும் விதமாக திருவாரூர் மாவட்ட திமுக செயலாளர் பூண்டி கே.கலைவாணன் எம். எல். ஏ. அறிவுறுத்தலின் படி வலங்கைமான் ஒன்றிய, நகர திமுக சார்பில் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சியில் வலங்கைமான் மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் வீ.அன்பரசன், கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் நரசிங்க மங்கலம்கோ.தெட்சிணா மூர்த்தி, வலங்கைமான் பேரூர் செயலாளர் பா.சிவனேசன், பேரூராட்சி மன்றத் தலைவர் சர்மிளா சிவனேசன், துணைத் தலைவர் க.தனித்தமிழ் மாறன், பேரூர் திமுக அவைத் தலைவர் சோம. மாணிக்கவாசகம், பொருளாளர் புருஷோத்தமன், துணைச் செயலாளர் வி.சி.ராஜேந்திரன், ஒன்றிய பிரதிநிதிகள் சிங்குத் தெரு எஸ்.ஆர். ராஜேஷ், சதானந்தம், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் செல்வமணி, க.செல்வம், ரம்ஜான் பீவி சிவராஜ், 6- வது வார்டு திமுக பொருளாளர் கோ.சண்முகசுந்தரம் யாதவ் மற்றும் ஒன்றிய, பேரூர் நிர்வாகிகள், அணி பொறுப்பாளர்கள், கட்சியினர், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.