கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் பங்களா மேடு ஸ்ரீ மகா சக்தி மாரியம்மன் திருக்கோவில் 15 ஆம் ஆண்டு திருவிழா கிராம சாந்தி நிகழ்ச்சியுடன் துவங்கியது. இதையடுத்து மகா கணபதி ஹோமம் மற்றும் பொரி சாட்டுதல் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜை நடைபெற்றது. தொடர்ந்து அக்னி கம்பம் நடுதல், திருவிளக்கு பூஜை, கரகம் பூச்செட்டி எடுத்து வருதல் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளதாக கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர் . பொரி சாட்டுதல் நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனின் அருள் ஆசி பெற்றுச் சென்றனர்.