திருவாரூர் மாவட்டம் நன்னிலம் சட்டசபை தொகுதி திமுக இளைஞரணி சார்பில் குடவாசல் ஒன்றியம் மஞ்சக்குடியில் இந்தி திணிப்பு மற்றும் நிதி பகிர்வில் பாரபட்சம் காட்டும் ஒன்றிய அரசை கண்டித்து பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட திமுக செயலாளர் பூண்டி கே. கலைவாணன் எம். எல்.ஏ.தலைமை தாங்கினார். முன்னாள் எம்எல்ஏ குத்தாலம் கல்யாணம், ஒன்றிய செயலாளர்கள் பிரபாகரன், ஜோதி ராமன், வீ.அன்பரசன், நரசிங்க மங்கலம் கோ. தெட்சிணாமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.முன்னதாக மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் பனங்குடி குமார் அனைவரையும் வரவேற்று பேசினார்.
கூட்டத்தில் திமுக தலைமை தேர்தல் பணிக்குழு செயலாளர் கம்பம் செல்வேந்திரன், மாநில இளைஞர் அணி துணைச் செயலாளர் இளையராஜா, பேச்சாளர் வேல்முருகன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார். இதில் பொதுக்குழு உறுப்பினர் முருகேசன், ஒன்றிய செயலாளர்கள் மனோகரன், செல்வராஜ், பேரூர் செயலாளர்கள் வலங்கைமான் பா.சிவனேசன், சேரன், சிவதியாகு, பக்கிரிசாமி, குடவாசல் ஒன்றிய இளைஞர் அணி செயலாளர்கள் மணிமாறன், சக்தி பாலன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் தாஹீர் அலி, கல்யாணசுந்தரம் ஆகியோர் நன்றி கூறினார்.